தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் நடந்த கலந்துரையாடலுக்கு பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“தென்னிலங்கையில் உள்ள ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், சட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைச்சாலையை எதிர்கொள்ளும் பயத்தில் அரசாங்கத்தை வீழ்த்தவும், மீண்டும் இனக்கலவரங்களைத் தூண்டவும் பார்க்கிறார்கள்.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சினைகளைப் பேசுவதையோ, மக்கள் நலத் திட்டங்களை வரவேற்பதையோ விடுத்து, கடந்த தேர்தலில் மக்கள் ‘தேசிய மக்கள் சக்திக்கு’ அளித்த ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் செயல்படுகின்றனர்.
திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
மாநகரசபை எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுக்காததால் காவல்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மாநகரசபையும் காவல்துறையும் தங்களின் எல்லைக்குட்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாததன் விளைவே இது.
இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் தேவையான உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

No comments: