மேன்முறையீட்டு நீதிபதிகளாக நியமிக்க இருவரின் பெயர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புப் பேரவைக்கு பரிந்துரை
- சிவகுமார், ஆனந்தி, ஞானேச ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை, அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவிதுள்ளது.
அத்துடன், நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, பெருமாள் சிவகுமார், ஆனந்தி கனகரத்னம், ஞானேச லலித் கன்னங்கர ஆகிய நீதிச்சேவை அதிகாரிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாளை (23) நியமிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
No comments: