News Just In

9/22/2026 06:08:00 AM

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை



சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி விசேட அறிக்கை ஒன்றைத் தான் வெளியிடவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனோஜன் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் நேற்று அவர்கள் சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: