News Just In

8/15/2026 05:35:00 PM

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா




வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: