– உலகத் தரவரிசையிலும் 2ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தல்
இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை சுவிட்சர்லாந்தின் லோசானில் நடைபெற்ற 2026 வண்டா டயமண்ட் லீக் – லோசான் (Wanda Diamond League – Lausanne) தடகளப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று நாட்டுக்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்ட அவர், ஈட்டி எறிதலில் 88.14 மீற்றர் தூரம் வீசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை விளையாட்டுத் துறையை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளார்.
இப்போட்டியில் முன்னாள் உலக சம்பியனும், ஒலிம்பிக் சம்பியனுமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.05 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் மற்றொரு முன்னாள் உலக சம்பியனான அண்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்களைப் பின்தள்ளி, இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்தமையானது சர்வதேச தடகள வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருமேஷ் தரங்க பங்கேற்ற மூன்றாவது டயமண்ட் லீக் போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற ரோம் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் வீசி முதலிடத்தைப் பெற்று அசத்தியிருந்த அவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டோஹா டயமண்ட் லீக் போட்டியிலும் முதலிடத்தை வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.
மேலும், இவ்வருடம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 89.75 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசையின்படி ருமேஷ் தரங்க உலகளாவிய ரீதியில் 2ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.
குறுகிய காலப்பகுதியில் உலகத் தடகள அரங்கில் அசுர வேக முன்னேற்றத்தைக் கண்டுவரும் ருமேஷ் தரங்கவின் இந்தத் தொடர் வெற்றிகள், எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்குப் பதக்கத்தை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையை விளையாட்டு இரசிகர்களிடையே விதைத்துள்ளது.

No comments: