
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சமித்புர சது என்ற பாதாள உலகக் குற்றவாளி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த திமுது சதுரங்க என்ற சமித்புர சது, ஓமானில் இருந்து இன்று(18.08.2026) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், மட்டக்குளியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் நடந்த கொலை ஒன்றுக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கையெறிக் குண்டொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தில் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் இந்த சந்தேகநபர் சட்டவிரோதமாக பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் குறித்தும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

No comments: