
திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி பிற்பகல் வேளையில் இத்தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, பிரான்சில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான 'குடு அஞ்சு' என்பவரே இந்த கொலையை வழிநடத்தி உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments: