News Just In

8/16/2026 02:33:00 PM

பாசிக்குடாவை மையமாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

பாசிக்குடாவை மையமாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி
பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளுர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

உலக வங்கியின் அனுசரணையுடன், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மீனவர்களுக்கும் உள்ளுர் சுற்றுலாத் துறைக்கும் பங்கம் ஏற்படாவண்ணமும் வீதி புனரமைப்புக்கள், சுற்றாடல், நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, உள்ளுராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படும் வகையில் செயற்றிட்ட முன்மொழிவுகள் அளிக்கை செய்யப்பட்டது.

மீனவர்களுக்கென தனியானதொரு அலகை கல்குடாவில் உருவாக்கி கொடுப்பது தொடர்பாகவும் இதன்போது திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.

பாசிக்குடா பிரதேசத்தில் சமூகப் பங்களிப்பை மையமாகக் கொண்ட சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் கரிசனை காட்டப்பட்;டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், கிறான்ட் ரொரன்ட் வாறத் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மெஹாலி பட்டேல், கட்டிடக்கலை நிபுணர் ஜெயடுட் வைஸ்ணவ் உட்பட மாவட்ட செயலக உயரதிகாரிகள், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கு பற்றினர்.

No comments: