News Just In

8/10/2026 02:43:00 PM

மட்டக்களப்பில் கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு செய்து முடிக்குமாறு ஆலோசனை.

மட்டக்களப்பில் கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு செய்து முடிக்குமாறு ஆலோசனை.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – வவுணதீவு படுவான்கரைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகளை பருவ மழை துவங்குவதற்கு முன்னர் விரைவாக நிறைவு செய்து மக்களின் போக்குவரத்திற்கு கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பிக்கட்டுள்ள ஒருங்கிணைந்த கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆராயும் கள விஜயத்தை தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு மேற்கொண்டிருந்தார்.

கள விஜயத்தின்போது, அங்கு நடைபெற்று வரும் வீதி அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு, கால தாமதமின்றி வீதி அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வீதி நிருமாணத்தில் ஈடுபடுபவர்களிடம் வலியுறுத்தினார்.

கிழக்கில் வரும் செப்ரெம்பெர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கும் மழைப் பருவ காலம் பெப்ரவரி வரை நீடிக்கும் என்பது வழமையாக அனுமானிக்கும் வடகீழ்ப் பருவ பெயர்ச்சி மழைக் காலமாகும்.

No comments: