வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தியப் பாதுகாப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: