( ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, பொலிஸ் தலைமையகம் இடமாற்றங்களை வழங்கியதன் அடிப்படையில் கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே கடமைப் பொறுப்பெற்றுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற கடமையேற்பு நிகழ்வில் உத்தியோக பூர்வமாக அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியனகே சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
No comments: