வறட்சியின் பிடியில் நான்கு மாவட்டங்கள்: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலேயே இந்தப் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய, வறட்சி காரணமாகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீரை விநியோகிப்பதற்கான பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ஏனைய நிவாரண உதவிகளைத் தடையின்றி வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் இணைந்து விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
8/15/2026 05:47:00 AM
Home
/
Unlabelled
/
வறட்சியின் பிடியில் நான்கு மாவட்டங்கள்: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
வறட்சியின் பிடியில் நான்கு மாவட்டங்கள்: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: