மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு, நோயாளர் விடுதி ஆகியவை திறந்து திங்களன்று 17.08.2026 பிற்பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கென சுகாதார அமைச்சு 432 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், நவீன மருத்துவ உபகரணங்களுடன் நோயாளர்களுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இதய நோயாளர்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய தரமான சிகிச்சை சேவைகளை இங்கு பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதயவியல் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் டொக்டர் அருள்நிதி, வைத்தியசாலைப் பணிப்பாளர், சமூகத்தின் சார்பில் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார்.
வைத்தியசாலை திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன், பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எல். தாஹிறா சபியுதீன், வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் அருள்நிதி, பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
No comments: