News Just In

8/18/2026 03:52:00 PM

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 2ஆம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 2ஆம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு


நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டுக்கான 2ஆம் தவணைப் பரீட்சையில் தத்தமது வகுப்புகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 17.08.2026 அன்று நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.சி.எம். நளீம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதி அதிபர் திருமதி றிஸ்லியா உவைஸ் தலைமையில் இடம்பெற்றது.

2026ஆம் ஆண்டின் 2ஆம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான ஆர்வத்தையும் போட்டி மனப்பான்மையையும் வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டிய பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்திலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.

No comments: