
போர் முடிவடைந்துவிட்ட நிலையில், இராணுவம் விடுவிப்பது மக்களுடைய சொந்தக் காணிகளையே தவிர, இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:காணி விடுவிப்பு: பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகத் தென்னிலங்கையில் சில இனவாத நோக்கில் குரல் எழுப்பினாலும், அரசாங்கம் இந்தச் செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என ஆளுநர் உறுதியளித்தார்.
அபிவிருத்தி மற்றும் முதலீடுகள்: வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் குறித்தும் தூதுவர்களுடன் விவாதிக்கப்பட்டது. மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விவாதங்கள்: மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: