News Just In

7/22/2026 04:41:00 PM

அமித் ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து

அமித் ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து



 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் மைதானத்தில் வரும் சனிக்கிழமை (ஜூலை 25) மாலை நடைபெற இருந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை வழங்கி கவுரவிக்க, புதுச்சேரி வருகை தர இருந்தார். இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “மத்திய உள்துறை அமைச்சரின் புதுச்சேரி வருகை திடீரெ ரத்தாகியுள்ளது. மாற்று தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்பட்டால் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தனர்

No comments: