News Just In

7/19/2026 05:43:00 PM

தவறான திசையில் செல்லும் அமெரிக்கா - முன்னாள் கடற்படை அதிகாரி எச்சரிக்கை!

தவறான திசையில் செல்லும் அமெரிக்கா - முன்னாள் கடற்படை அதிகாரி எச்சரிக்கை!


ஈரானுடனான போரில் அமெரிக்கா எந்தவொரு தெளிவான வியூகமும் இன்றி, முடிவற்ற மோதல் சுழற்சிக்குள் சிக்கியுள்ளதாக அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் மூத்த அதிகாரி ஹார்லன் உல்மான் எச்சரித்துள்ளார்.

அல்-ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போதுள்ள மோதல் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் ஏற்பட்ட பாதிப்புகளைப் போலவே, ஈரானுக்கு எதிராகத் தொடர் மோதல்களைக் கையாளும் அமெரிக்காவின் தற்போதைய போக்கும் பெரும் துயரத்தில் முடியலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
\
அத்துடன் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் எந்தவிதத்திலும் அவர்களுக்குப் பயன் தராது என்பதால், இப்போதைய சூழலிலிருந்து பின்வாங்கி இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை எட்டுவதே இரு நாடுகளுக்கும் சிறந்தது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய இராணுவ நகர்வுகள் பெரும் ஆபத்தை நோக்கிச் செல்வதாக இராணுவ நிபுணர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

No comments: