நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!
நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் (பேரிடர் மற்றும் நீர் மேலாண்மை) எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 44% முதல் 45% வரையான அளவிலேயே காணப்படுகிறது எனவும் ஒக்டோபர் மாதளவில் பெரும்போக விவசாயப் பணிகளுக்காக நீர் விநியோகம் செய்யதிட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'எல் நினோ' காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை எதிர்பார்த்தபடி மழை பெய்யாவிட்டால், தற்போதுள்ள நீரைக் கொண்டு நிலைமையை மேலாண்மை செய்வதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை வழக்கமான ஆண்டுகளைப் போல இம்முறை போதியளவு கிடைக்கவில்லை எனவும், சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் அது 10 முதல் 15 மில்லிமீட்டர் போன்ற மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
7/20/2026 09:07:00 AM
நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: