News Just In

7/02/2026 09:42:00 AM

நாட்டிலுள்ள வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது இனி கட்டாயம்!

நாட்டிலுள்ள வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது இனி கட்டாயம்!




நாட்டிலுள்ள வளர்ப்புப் பிராணிகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், விசர்நாய் கடி நோயைத் (Rabies) தடுப்பதற்கான வழிமுறைகளைக் கட்டாயமாக்கவும் புதிய சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, "விசர்நாய் கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்தல் சட்டமூலத்திற்கு" அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைவாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் மூலம், வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது சட்டரீதியாகப் பலப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான நிறுவனங்களின் பொறுப்புகளும் அதிகாரங்களும் தெளிவாக வரையறுக்கப்படவுள்ளன.

குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: