நாட்டின் பாதாள உலகத்தின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும், எண்ணற்ற கொலைகள் மற்றும் மனிதாபிமானமற்ற குற்றங்களுக்குப் பொறுப்பான 'காஞ்சிபானி இம்ரான்', ஒரு வெளிநாட்டில் பதுங்கியிருந்து, சர்வதேச குற்றவியல் காவல்துறையின் பிடியிலிருந்தும் தப்பித்து, இலங்கையில் ஆபத்தான பாதாள உலக நடவடிக்கைகளை நடத்தி வருவதாக புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
2019-ல் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், 2021-ல் பிணை வழங்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டுத் தப்பி சென்றிருந்தார்.
அன்று முதல், அவர் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி சர்வதேச எல்லைகளைக் கடந்து செல்வதோடு , பாதாள உலகத்தின் இருண்ட பக்கங்களில் எழுதப்பட்ட பல கொலைகளின் முக்கிய சூத்திரதாரியாகவும் மாறியுள்ளார் என புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன.
கஞ்சிபானி இம்ரான் ஒரு உள்ளூர் பாதாள உலகத் தலைவர் மட்டுமல்ல, தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பெரிய அளவிலான மாஃபியா கும்பல்களுடன் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.
அவர் சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை இயக்கி வருவதால், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இவரை கைது செய்வதற்காக, இலங்கை காவல்துறை சர்வதேச இன்டர்போல் மூலம் 02 ஒகஸ்ட் 2024 அன்று .A-888. என்ற எண்ணின் கீழ் ஒரு சிவப்புப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும், அவன் தொடர்ந்து தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதுடன், பாதுகாப்புப் படையினரின் கண்களிலிருந்து மறைந்தும் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் தொடர்புபட்டு வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது அவரது இருப்பிடம் அல்லது சர்வதேசத் தொடர்புகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, சர்வதேசக் காவல் பிரிவுக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் துறையின் சர்வதேச ஒருங்கிணைப்புப் பிரிவுக்கோ உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: