
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) பிற்பகல் இந்த மோதல் சம்பவ,ம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த வாரம் நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் 28 பேர் உயிர்ழந்ததுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: