யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டு தொகுதியின்றி காணப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3 என்புத்தொகுதிகள் உட்பட மொத்தமாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வின் போது சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டுத்தொகுதி இன்றி காணப்பட்ட அதேவேளை, மேலும், சில இடங்களில் மண்டையோட்டு தொகுதிகள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புகள் மற்றும் மண்டையோட்டுத்தொகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்த மேலதிக தகவல்கள், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவின் ஆய்வுகளுக்கு பின்னரே உறுதியாக தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது

No comments: