திருக்கோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை (22) தொல்பொருள் திணைக்களத்தினால் குறித்த பகுதியில் காணப்படும் தொல்பொருள் இடங்களை புணரமைப்பு செய்யும் நோக்குடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு காலை 10.20 மணியளவில் குறித்த பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் என பலர் கலந்து கொண்டனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் திருக்கோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் W. U. சுரங்க பெரேரா, திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G.M. ஹேமந்த குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments: