News Just In

7/20/2026 08:08:00 PM

மட்டக்களப்பு நகரில் குப்பை அகற்றும் தாய்வான் நாட்டின் இயற்கை நேசர்களான இளைஞர் யுவதிகள்.

மட்டக்களப்பு நகரில் குப்பை அகற்றும் தாய்வான் நாட்டின் இயற்கை நேசர்களான இளைஞர் யுவதிகள்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இயற்கை நேசர்களான தாய்வான் நாட்டு இளைஞர், யுவதிகள் இங்குள்ள இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதை உள்ளுர் மக்களுக்கு வலியுறுத்தி விழிப்புணர்வை ஊட்டுவதற்காக பிளாஸ்டிக், பொலித்தீன் ஆகிய உக்காத கழிவுகளை அகற்றும் தொண்டுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் இந்த இயற்கை நேய சிரமதானப் பணி மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. சமூக சேவை அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது.

திங்களன்று காலை மட்டக்களப்பு நகர வாவிக்கரையோரத்தை அண்டிய பகுதிகளில் சிதறிக் கிடக்கும் உக்காத பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை சிரமதானத்தின் மூலம் அகற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

தாய்வான் நாட்டு இயற்கை நேச இளைஞர், யுவதிகளுடன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பின் தொண்டர்களான இளைஞர், யுவதிகளும் இணைந்து கொண்டு இந்த சிரமதான விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: