அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அடிபணியாது’
அமெரிக்காவின் அச்சுறுத்தல் மொழிகளை ஈரான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் அச்சுறுத்தல் மொழிகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், அமெரிக்காவுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி நேற்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அராக்ச்சி கருத்து தெரிவிக்கையில்,
ரஷ்யா மற்றும் சீனா உடனான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாங்கள் சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள எங்களின் நண்பர்கள் உடன் ஆலோசனைகளை நடத்துகிறோம்.
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் நலன்களைப் பாதுகாப்பது எங்களின் கொள்கைகளில் ஒன்று. அவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஈரானிய மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்களின் நடவடிக்கைகள் தொடர்வது இயல்புதான் எனக் கூறியுள்ளார்
7/26/2026 10:45:00 AM
’அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அடிபணியாது’
Subscribe to:
Post Comments (Atom)
No comments: