லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் 30வது வருட பேராளர் மாநாடு, நேசம் சஞ்சிகை வெளியீடு மற்றும் "திறமைக்கான தேடல் – Talent Awards 2026" விருது வழங்கும் முப்பெரும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (19) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மூதூர் ஜே.எம்.ஐ., உலகவலம் மற்றும் நேசம் டிவி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், நேசம் டிவி மற்றும் உலகவலத்தின் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சிரேஷ்ட ஒலி–ஒளிபரப்பாளருமான கலாநிதி ஏ.எல். அன்ஸார் தலைமை தாங்கினார்.
கிராமிய பொருளாதார முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
முன்னிலை அதிதிகளாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான தமிழ் மருதமாமணி கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது, சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் நேசம் டிவியின் பொறுப்பதிகாரியுமான ஹிபத்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர். விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஷா, இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் பெண்கள் பிரிவுத் தலைவியுமான முஹம்மட் றாசிக் பாத்திமா றஸ்மியா, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பொதுச்செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா, சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது நேசம் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், நேசம் சஞ்சிகையின் திறன்நோக்கு அதிதியாக மூதூர் ஜே.எம்.ஐ.இஹ்ஸான் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் முதற்பிரதியை கலைஞர் முனைமருதவன் எம்.எச்.எம். இப்ராஹிம் பெற்றுக்கொண்டார். மேலும், மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கௌரவப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
லக்ஸ்டோ மீடியாவின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 பேருக்கு "திறமைக்கான தேடல் – Talent Awards 2026" விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும், கடந்த ரமழான் மாதத்தில் லக்ஸ்டோ மீடியா நடத்திய இஸ்லாமிய கேள்வி–பதில் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனை முன்னிட்டு, தேசிய சமாதான நீதிபதிகள் சபையின் உறுப்பினர்கள் மற்றும் லக்ஸ்டோ மீடியா உறுப்பினர்களுக்காக "சட்டம், ஊடகம் மற்றும் தலைமைத்துவம்" தொடர்பான செயலமர்வும் காலை நடைபெற்றது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சமாதான நீதிவான்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கவிஞர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
No comments: