கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இந்த விபத்தைச் சந்தித்ததுடன், பறவை மோதியதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
246 பயணிகளுடன் தரையிறக்கம்
அதன் பின்னர், தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு - காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தரையிறங்குவதற்கு ஏற்ற நிலையை அடைந்த பின்னர், அது காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும், ஏர்பஸ் A-330 ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாக 'அட டெரானா' விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். விமானம் இன்று காலை 7.07 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 கிலோகிராம் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
எரிபொருள் குறையும் வரை பறந்த விமானம்
விமானம் புறப்பட்ட உடனேயே பறவை மோதியது, இதுகுறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.

இதன் விளைவாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, விமானம் நீர்கொழும்பு கடற்காயலுக்கு மேலே 7,000 அடி உயரத்தில் மணிக்கு 253 நாட்ஸ் வேகத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்து, அவசரகாலத் தரையிறக்கத்திற்காக விமான நிலையமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: