நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சேர் ஜான் டர் பேட் (Sir John Tarbet Athletic Meet) தடகளப் போட்டியில், சாய்ந்தமருது கமு/கமு./லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 80 மீற்றர் தடைதாண்டும் ஓட்டப் போட்டியில் மாணவன் ரீ. நாதீக் ஜூதிஹ் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதேவேளை, 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. இவ்வெற்றி பாடசாலையின் தடகள வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மாணவர்களின் இச்சிறப்பான சாதனைக்காகவும், மாணவர்களை போட்டிக்காக திறம்படப் பயிற்றுவித்து வழிநடத்திய பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ ஆபாக் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவைக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதியதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
No comments: