News Just In

7/11/2026 07:28:00 PM

வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு


வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ருட்டிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் ஓஷன் பேர்ல் ஐலேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான வேகப்படகு ஒன்று புறப்பட்டது.

ஹான் மே ரட் ங்கோய் தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், அந்த படகு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.

இதனை கண்ட அந்த பகுதியில் இருந்து மற்ற சுற்றுலா படகுகளும் அவர்களை மீட்க உதவியது. கடற்படை, கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து, மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 35 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் 2 கப்பல்களை அனுப்பப்பட்டது.

ஆன் தோய் துறைமுக எல்லைக் காவல் நிலையத்தின் அறிக்கையின்படி, 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்த 32 பேரின் பெயர் பட்டியலையும், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்த பலரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பழனியை சேர்ந்த முருகபிரபு உயிரிழந்துள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக லாவா மொபைல் நிறுவனம் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.

No comments: