காலநிலை மாற்றம் இனி எதிர்கால அச்சுறுத்தலாக மட்டுமல்ல; அது இன்று உலகம் முழுவதும் மக்களின் வாழ்வை நேரடியாக பாதித்து வருகிறது. கடுமையான வெப்ப அலைகள், நீண்டகால வறட்சி, பேரழிவு வெள்ளங்கள் மற்றும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான உலகளாவிய காலநிலை மாற்ற நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று எல் நினோ (El Niño) ஆகும்.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அசாதாரணமாக உயர்வதன் மூலம் உருவாகும் இந்த நிகழ்வு, உலகின் பல நாடுகளின் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைமைகளை பாதிக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உருவாகினாலும், அதன் தாக்கம் இலங்கையிலும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் உணரப்படலாம்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது இயற்கையாக நிகழும் ஒரு காலநிலை நிகழ்வாகும். பசிபிக் பெருங்கடலில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது உலகளாவிய காற்றோட்டம் மற்றும் மழைப்பொழிவு முறைகளில் மாற்றம் ஏற்படுகிறது.
இதன் விளைவாக சில பகுதிகளில் வறட்சி உருவாக, சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளம் ஏற்படலாம். இலங்கை வரலாற்றில் பல எல் நினோ ஆண்டுகளில் வறட்சி மற்றும் பின்னர் கடுமையான மழைப்பொழிவு ஆகிய இரண்டும் பதிவாகியுள்ளன
No comments: