
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி மனிதப்புதைகுழியைச் பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 23 ஆவது நாள் அகழ்வுப்பணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றன.
இதன்போது 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 334 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைச் சென்று பார்வையிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
அதேவேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவ்வாரம் அல்லது எதிர்வரும் வாரம் செம்மணி மனிதப்புதைகுழிவைப் பார்வையிடச் செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments: