News Just In

6/22/2026 05:47:00 AM

தயா கமகேவின் சொத்துக்கள் இரண்டை ஏலத்தில் விடவுள்ள மக்கள் வங்கி!

தயா கமகேவின் சொத்துக்கள் இரண்டை ஏலத்தில் விடவுள்ள மக்கள் வங்கி



முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களின் சொத்துக்களை ஏலமிடுவதற்கு - மக்கள் வங்கி தீர்மானம் எடுத்துள்ளது.தயா கமகே - இலங்கையிலுள்ள மிக முக்கிய தொழிலதிபர் என்பதும், செல்வந்தர் என்பதும் நமக்குத் தெரியும்.

வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து பெற்றுக்கொண்ட 1.42 மில்லியன் டொலர் கடனை செலுத்தாமையினால், அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலமிடுவதற்கு - மக்கள் வங்கி தீர்மானம் எடுத்தது.
குறித்த கடன் தொகை இலங்கைப் பெறுமதியில் சுமார் 47.3 கோடி ரூபாயாகும்.
இதனையடுத்து, வங்கியின் இந்தத் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் - தயா குரூப் லிமிடெட் மற்றும் தயா அப்பேரல் எக்ஸ்போர்ட் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை - ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தன.

மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது.
மேலும், தமது கடனை மீட்கும் நடவடிக்கையைத் தொடர்வதற்கு - வங்கிக்கு சட்டபூர்வ உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.
மனுதாரர்கள்; 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், கொவிட்-19 பெருந்தொற்று, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்ட தொடர்ச்சியான - முன்னெப்போதும் இல்லாத பொருளாதார பின்னடைவுகளால், தங்களுக்கு நிதிச் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அவை கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பாதித்ததாகவும் வாதிட்டனர்.
இந்த மனு தொடர்பில் தீர்ப்பளித்த நீதிமன்றம், மனுதாரர்கள் ரூ. 01 மில்லியன் செலவுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது
.

No comments: