திலீப பீரிஸின் செயற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தை அவமதிக்கும் செயல் - சரத் வீரசேகர குற்றச்சாட்டு
திலீப பீரிஸ் சட்ட மா அதிபராக இருந்து கொண்டு, ஒட்டுமொத்த சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்படுகிறார். சுரேஷ் சலேவை வதை செய்தமை தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலன் கருதி களனி விகாரையில் பொதுஜன பெரமுன கட்சியின் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
திலீப பீரிஸ் சட்ட மா அதிபராக இருந்து கொண்டு, ஒட்டுமொத்த சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்படுகிறார். சுரேஷ் சலேவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டுப் புகலிடம் கோரிய அசத் மௌலானா, சனல் -4 ஊடகத்துக்கு வழங்கிய பொய்யான வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அசத் மௌலானாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்த இமாம் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியில் சுரேஷ் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் இருந்ததே தவிர, அவர் இலங்கையில் இருக்கவில்லை.
இலங்கை செய்திகள்
மேலும் கண்டறிக
வணிக செய்திகள்
விளையாட்டு செய்திகள்
உலக செய்திகள்
இவ்வாறான பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் அவரை 180 நாட்கள் சிறையிலடைத்து, 6க்கு 4 அடி அறையில் வைத்து சித்திரவதை செய்தமை தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக, உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
6/07/2026 11:24:00 AM
Home
/
Unlabelled
/
திலீப பீரிஸின் செயற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தை அவமதிக்கும் செயல் - சரத் வீரசேகர குற்றச்சாட்டு
திலீப பீரிஸின் செயற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தை அவமதிக்கும் செயல் - சரத் வீரசேகர குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: