News Just In

6/21/2026 10:19:00 AM

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் அன்பளிப்பு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் அன்பளிப்பு


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புதிய விளையாட்டு சீருடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

பாடசாலையின் விளையாட்டுப் பிரிவினர் விடுத்திருந்த வேண்டுகோளினை ஏற்று, கல்முனை எம்.ஏ. ஸ்போர்ட்ஸ் காம்ப்ளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஏ. அஸ்கான் இவ்விளையாட்டு சீருடைகளை மாணவர்களுக்காக வழங்கி வைத்தார்.

மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, பாடசாலை சமூகத்தினரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்த அன்பளிப்பிற்காக பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதியதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாத்தீம், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக் மற்றும் பாடசாலை சமூகத்தினர் சார்பில் எம்.ஏ. அஸ்கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

விளையாட்டுத் துறையில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமூக நலன்விரும்பிகள் வழங்கும் இத்தகைய பங்களிப்புகள் மாணவர்களின் உற்சாகத்தையும் சாதனை மனப்பாங்கையும் மேலும் உயர்த்தும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments: