News Just In

6/18/2026 02:40:00 PM

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கண்ணகி இந்து வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கண்ணகி இந்து வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை


நூருல் ஹுதா உமர்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது, சுற்றுப்புற சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்பல்ல என்றும், பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கியதுடன், ஆரோக்கியமான மற்றும் டெங்கு நோயற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.

No comments: