“ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை" அரச அலுவலர்களைத் தெளிவூட்டும் செயலமர்வு
“ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை" தொடர்பாக அரச அலுவலர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நோய் தொற்றுக்கள் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி சிறீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம். ருதேஷன் கலந்து கொண்டு "ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை" எனும் தலைப்பில் தெளிவூட்டல்களை வழங்கினார்.
No comments: