News Just In

6/06/2026 05:46:00 AM

செம்மணியில் 300 ஐ எட்டும் மனித எலும்புக்கூடுகள்!

செம்மணியில் 300 ஐ எட்டும் மனித எலும்புக்கூடுகள்!




செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியில் இன்றுடன் 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 17 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றைய அகழ்வில் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இன்றுடன் 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரனித்த தெரிவித்தார். அத்துடன் சான்றுப்பொருளாக மனித எலும்புக்கூட்டின் இடைப்பகுதியில் இரும்புத்தகடு மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: