News Just In

6/15/2026 03:01:00 PM

உலக சாதனை படைத்த “சங்கமம் 2026”! -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

உலக சாதனை படைத்த “சங்கமம் 2026”! -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!



நூருல் ஹுதா உமர்

இந்தியாவின் சங்கமம் குளோபல் எகடமி மற்றும் இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலி டேஸ் ஏற்பாட்டில், காலி முகத்திடலில் உலக சாதனை படைத்த “சங்கமம் 2026” 10,000 சலங்கைகளின் ஒரே தாளம் - 5000 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய உலக சாதனை படைத்துள்ளது. உலக சாதனை படைத்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் மாத்திரம் அல்ல, கலாச்சாரத்தை வளர்த்தல், பாரம்பரியத்தை மேம்படுத்தல் என்பவற்றிலும் பொருளாதார வளர்ச்சி தங்கியுள்ளது. அவ்வாறு தமிழர்களின் அடையாளமான பரதநாட்டிய கலை உலக சாதனை படைக்க, இந்தியாவின் சங்கமம் குளோபல் எகடமி மற்றும் இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலி டேஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்து, ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கம், அமைச்சர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பாதுகாத்து மென்மேலும் வளர செய்வது வரவேற்கத்தக்க விடயம். அரசின் ஒத்துழைப்பும், ஏற்பாடும் இன்றி இந்நிகழ்வை முன்னெடுப்பது கடினம். இந்நிகழ்வை சிறப்பாக நடத்த முன்னின்று செயற்பட்ட அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகரன், சுந்தர்லிங்கம் பிரதீப் மற்றும் அதிபர், நடன ஆசிரியர்கள், பாடசாலை சமூகம், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்வாறான நிகழ்வுகளின் ஊடாக தமிழ் கலாச்சாரத்தை வளர்த்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

No comments: