
போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் வெளிவிவகாரத் துணை அமைச்சர் ஆகியோர் தெரிவித்ததைத் தொடர்ந்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலை சரிந்தன.
சுமார் 107 நாட்கள் நீடித்த போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் போர்நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீட்டிக்கவும், நீரிணையை மீண்டும் திறக்கவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த ஒப்பந்தத்தை முதலில் அறிவித்தார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திடும் நிகழ்வு ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும், கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரையில் சரிவடைந்தது.
GMT நேரம் 22:03 மணி நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 3.51 டொலர் அல்லது 4.02 சதவீதம் சரிந்து 83.82 டொலராக இருந்தது; அதேவேளையில், அமெரிக்காவின் 'வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்' (WTI) கச்சா எண்ணெய் விலை 3.93 டொலர் அல்லது 4.63 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 80.95 டொலராக இருந்தது.
இந்த நிலையில், தங்களுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் எட்டியதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அந்நாட்டின் மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது. இதற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் ஐஏஇஏ (IAEA) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம் என்று அந்த நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். இதனால், இனி மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது
No comments: