News Just In

5/07/2026 01:28:00 PM

ஆட்சி அமைக்குமாறு விஜய்க்கு தமிழக ஆளுநர் அழைப்பு? - பரபரப்புத் தகவல்

ஆட்சி அமைக்குமாறு விஜய்க்கு தமிழக ஆளுநர் அழைப்பு? - பரபரப்புத் தகவல்

த.வெ.க தலைவர் விஜய் இன்று (7) மீண்டும் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்ததாகவும் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் இதன்போது விஜய் கோரியுள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் விஜய் ஆளுநரிடம் கூறியுள்ளார்.

ஆளுநருக்கும் விஜய்க்கும் இடையிலான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இதன் பின்னர், விஜய் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறி, தனது கட்சி அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: