News Just In

5/10/2026 05:26:00 PM

மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு !

மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு !


நூருல் ஹுதா உமர்

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மாதாந்த அமர்வு சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா, ஓய்வு பெற்ற அதிபர் யூ.எல். நஸார், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நௌசாத் உள்ளிட்ட கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாசார விழாவில் 2025 ஆம் ஆண்டிற்கான “வித்தகர் விருது” பெற்ற ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எம்.ஐ. அஸ்ரப் அவர்களும், “இளம் கலைஞர் விருது” பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல் அவர்களும் விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.

கலை மற்றும் கலாசார துறைகளில் இவர்களின் நீண்டகால பங்களிப்புகள் பாராட்டப்பட்டதுடன், இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் நிகழ்வில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

மேலும், கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளை சமூக மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மருதம் கலைக்கூடல் மன்றம் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நிகழ்வு கலாசார மற்றும் கலை ஆர்வலர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிறைவுற்றது.

No comments: