இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராகவும் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினராகவும் நான், 2026 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதிநிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும்உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சரிடம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசஊழியர்கள் எதிர்கொள்ளும் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகளைமுன்வைத்திருந்தேன்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும், பல வருடங்கள் அரச சேவையில்பணியாற்றிய ஓய்வூதியதாரர்கள் பல்வேறு சிரமங்களையும் நிர்வாகசிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதலில்இலங்கையில் தற்போது ஓய்வூதியம் பெறும் நபர்களின் மொத்த எண்ணிக்கை என்னஎன்பதையும், ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் செலவிடும்மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும் கேட்டிருந்தேன்.
அதன்பின்னர், ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தும் இதுவரை
ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை என்ன, மேலும் நிலுவையில்உள்ள ஓய்வூதியத் தொகைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளவர்களின் எண்ணிக்கைஎவ்வளவு என்பதையும் அறிய விரும்பினேன். ஏனெனில் பலர் தங்களுக்குரியஉரிமைகளைப் பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்க வேண்டிய நிலைஉருவாகியுள்ளது.
ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு கடைசியாகஎப்போது இற்றைப்படுத்தப்பட்டது என்பதையும் நான் கேட்டிருந்தேன்.காலத்திற்கேற்ற வகையில் நடைமுறைகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதுமக்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும், ஓய்வூதியத்தொகையிலிருந்து அறவிடப்படும் வருமான வரி தொடர்பாக எளிய மற்றும் தெளிவான
நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த முடியுமா என்றும் கேட்டிருந்தேன். தற்போதையபொருளாதார நெருக்கடியில் வாழும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிக வரிச்சுமைஏற்படுவது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் ஓய்வூதியகொடுப்பனவுகள் மீதான வரியை நீக்கி அதற்கு மாற்று நடைமுறைகளை அரசாங்கம்பரிசீலிக்க வேண்டுமெனவும் நேரடியாக அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.
அதேபோன்று, அரச ஊழியர்களிடமிருந்து அறவிடப்படும் விதவைகள் மற்றும்
அநாதைகள் பங்களிப்புத் தொகைகள் தொடர்பாக முறையான நடைமுறையொன்றைஉருவாக்கி, வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகித்து, பங்களிப்புச்செய்பவர்களுக்கு உரிய பிரதிபலன் கிடைக்கக்கூடிய அமைப்பை உருவாக்கமுடியுமா என்றும் கேட்டிருந்தேன்.
10 வருடங்களுக்கும் குறைவான சேவைக்காலத்தைக் கொண்ட அரச ஊழியர்கள் தற்போதுதனிப்பட்ட ரீதியில் அமைச்சரவை அனுமதி பெற்ற பின்னரே ஓய்வூதியம் பெறவேண்டிய நிலை காணப்படுகிறது. இது மிகவும் சிக்கலான மற்றும் காலதாமதமானநடைமுறையாக உள்ளது. எனவே 10 வருடங்களுக்கும் குறைவான சேவைக்காலம் கொண்ட
அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொதுவான நடைமுறையின் கீழ் ஓய்வூதியம்பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையை உருவாக்க முடியுமா என்றும், இந்த அதிகமானகாலதாமதத்திற்கான காரணம் என்ன என்றும் கேட்டிருந்தேன்.
ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் ஆவணச்சரிபார்ப்பு நடவடிக்கைகளின் போது தமிழ் மொழி பேசும் ஓய்வூதியதாரர்கள்எதிர்கொள்ளும் அசௌகரியங்களையும் சபையில் சுட்டிக்காட்டினேன். தமிழ்மொழியில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமை, தேவையான ஆவணங்களின்
பட்டியல் SMS மூலம் அறிவிக்கப்படாதமை, மாவட்ட மட்டங்களில் நேர்முகப்
பரீட்சைகள் நடத்தப்படாதமை போன்ற காரணங்களால் தூரப் பகுதிகளில் வசிக்கும்ஓய்வூதியதாரர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தப்பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளைஎடுக்க முடியுமா என்றும் கேட்டிருந்தேன். அதேபோன்று, ஓய்வூதியதாரர்கள்ஆவணச் சரிபார்ப்பிற்காக வரும்போது அவர்களை இன்முகத்துடன் வரவேற்று,அவர்கள் நாட்டிற்காக ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் உரியஉத்தியோகத்தர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.
இதனுடன் சேர்த்து, நாட்டில் நீண்டகால நிதி நிலைத்தன்மையை
உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வூதிய நிதியம் ஒன்றை உருவாக்க முடியுமா
என்பதையும் அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.
மேலும், சாதாரண கால சேவையில் இருந்து பின்னர் நிரந்தர சேவைக்குள்
உள்ளீர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படாதபிரச்சினை தொடர்பாகவும் நான் கேள்வி எழுப்பினேன். இந்த பிரச்சினைக்குதீர்வு காணும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டேன்.
எனினும், நான் சபையில் எழுப்பாத சில கேள்விகளுக்கு அமைச்சர்
பதிலளித்திருந்த போதிலும், நான் நேரடியாக முன்வைத்த முக்கியமான
கேள்விகளான ஓய்வூதிய வரி நீக்கம், ஓய்வூதிய நிதியம் உருவாக்கம் மற்றும்
நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சினை
தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
எனவே, ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச ஊழியர்களின் வாழ்வாதாரத்துடன்
நேரடியாக தொடர்புடைய இந்த முக்கியமான கேள்விகளுக்கு அமைச்சர் தெளிவானபதில்களை வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments: