News Just In

4/08/2026 07:56:00 AM

“பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது” - விஜய்க்கு புத்தி சொன்ன சீமான்

“பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது” - விஜய்க்கு புத்தி சொன்ன சீமான்



“அடக்​கு​முறை, ஒடுக்​கு​முறைக்கு அஞ்சுபவர் புரட்​சியாளனாகவோ, வீரனாகவோ ஆக முடியாது. பயப்படக்​கூ​டாது. பயந்தால் கடைசிவரை வீட்டை​விட்டு வெளியே வரமுடி​யாது” என நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரிவித்​தார்.

சென்னையில் எழும்​பூர், மயிலாப்பூர், அண்ணாநகர், வில்லி​வாக்கம் தொகுதிகள் போட்டி​யிடும் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான், நேற்று பிரச்​சாரம் மேற்கொண்​டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால், ஆட்சி முறை மாறவில்​லையே. அன்று அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி இரண்டு ரூபாய் கொடுத்தது. இன்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து ரூ.2 ஆயிரம் கொடுக்​கின்​றனர். ஜனநாயகத்தின் வலிமைமிக்க ஆயுதம் வாக்கு. அதை விற்கிறீர்கள் எனில் எங்கே இருக்கும் மக்களுக்கான அதிகாரம்?” என்று கேள்வி எழுப்​பி​னார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எங்களுக்கு வரும் கூட்டம் எங்களை பார்ப்​ப​தற்காக வருவதில்லை. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை கேட்க வருகின்​றனர். விஜய் வந்ததால் நாங்கள் பின்னுக்கு தள்ளப்​படுவோம் என்கின்​றனர். நாங்கள் ஒன்றும் ஆட்டுக்கல் அல்ல, பின்னுக்குத் தள்ளி​விட்டு செல்வதற்கு. விக்கிர​வாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தல்​களில் விஜய் நிற்காத நிலையில் அவரது வாக்கு​களில் கொஞ்ச​மாவது எனக்கு விழுந்​திருந்தால் 10 அல்லது 15 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றிருக்க மாட்டேனா? எனக்கு வாக்கு செலுத்தியவர்கள் ரசிகர்கள் அல்ல.

விஜய் பிரச்​சாரம் செய்வதற்கு நெருக்கடி கொடுக்​கப்​படுவதாக கூறுகின்​றனர். நான் சந்திக்காத நெருக்​கடிகளா? 260 வழக்கு​களுக்கு மேல் வாங்கி​யிருக்​கிறேன். நான் ஏறாத நீதிமன்ற படிக்​கட்டு இல்லை. செல்லாத சிறையும் இல்லை. அடக்கு​முறை, ஒடுக்​கு​முறைக்கு அஞ்சுபவர் புரட்​சி​யாள​னாகவோ, வீரனாகவோ ஆக முடியாது. பயப்படக்​கூ​டாது. பயந்தால் கடைசிவரை வீட்டை​விட்டு வெளியே வரமுடி​யாது. மீறி வந்து பிரச்​சாரம் செய்தால் என்ன செய்வார்கள்? வழக்குத்தானே போடட்​டும். தடை அதை உடை அவ்வளவு​தான். நெருக்​கடிகளை தாண்டித் தான் வெல்ல​வேண்​டும்.

காரைக்​குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது. ஓட்டும் கிடையாது என எம்பி-யான கார்த்தி சிதம்பரம் கூறுகி​றார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டி​யிட்​டனர். அவர்களுக்கு அங்கு வீடு இருந்ததா? ஓட்டு இருந்ததா? இதே காங்கிரஸ் கட்சி தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருத்தரை மேலூர் வேட்​பாளராக நிறுத்​தி​யிருக்​கிறது. இவ்வாறு அவர் கூறி​னார்​.

No comments: