News Just In

4/03/2026 07:18:00 AM

உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளில் சாதித்த மட்டக்களப்பு மாணவர்களை வீடு தேடி சென்று பாராட்டிய சாணக்கியன் எம்.பி.

உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளில் சாதித்த மட்டக்களப்பு மாணவர்களை வீடு தேடி சென்று பாராட்டிய சாணக்கியன் எம்.பி.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரியல் மற்றும் பௌதீக விஞ்ஞானப் பிரிவுகளில் சிறந்த சாதனைகள் படைத்த மாணவர்களை, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் நேரில் வீடு தேடி சென்று பாராட்டினார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் யூட்நிமல் அனுஷ்ராம், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதேவேளை, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயம் (தேசியப் பாடசாலை) மாணவன் T. ஹரிமேனுஜன், பௌதீக விஞ்ஞானப் பிரிவில் மாவட்டத்தில் முதல்நிலையைப் பெற்றுள்ளார்.
இவ்விரு மாணவர்களையும் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாழ்த்திய சாணக்கியன் எம்.பி., அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில் பயணங்களில் மேலும் முன்னேறி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறப்பான சேவையாற்ற வேண்டுமென தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

No comments: