News Just In

4/03/2026 07:23:00 AM

ஈரானின் மிகப்பெரிய பாலம் மீது நடந்த வான்வழி தாக்குதல்!

ஈரானின் மிகப்பெரிய பாலம் மீது நடந்த வான்வழி தாக்குதல்! 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் ஈரானின் கராஜ் நகரில் உள்ள ஒரு பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காணொளியை பகிர்ந்துள்ளார்.

குறித்த காணொளியில்,

இன்று நடந்த வான்வழி தாக்குதலுக்கு பின் அந்த பாலம் தீப்பற்றிய புகை மேகத்துடன் சிதறி விழுவது காணப்படுகிறது. இதற்கு முன்பு, Israeli Defense Forces (இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்) இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று தெரிவித்திருந்தது.

இப்போது, இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தான் பொறுப்பானது என டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டுவது போல் தெரிகிறது.

ஈரானின் மிகப்பெரிய பாலம் சிதறி விழுந்துவிட்டது, இனி ஒருபோதும் பயன்படுத்த முடியாது இன்னும் பல நடவடிக்கைகள் தொடரும்.

மிகவும் தாமதமாகிவிடும் முன், ஈரான் உடன்படிக்கைக்கு வர வேண்டிய நேரம் இது. இல்லையெனில், ஒரு பெரிய நாடாக மாறக்கூடிய அதன் மீதமுள்ள எதுவும் எஞ்சாது!என்று அவர் தனது சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: