அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிபந்தனையுடன் கூடிய இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை அடுத்து, உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மிக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
பெஞ்ச்மார்க் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை சுமார் 15.9 சதவீதமாக குறைந்து ஒரு பீப்பாயின் விலை 92.30 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க மசகு எண்ணெய் (WTI) விலை 16.5 சதவீதமாக சரிந்து 93.80 அமெரிக்க டொலர்களாக குறைந்ததுள்ளது.
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்தை ஈரான் அனுமதிக்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
இருப்பினும், கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி பதற்றங்கள் அதிகரிப்பதற்கு முன்பு மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்கள் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய விலை வீழ்ச்சிக்குப் பிறகும் எண்ணெய் விலைகள் கணிசமான அளவு உயர்விலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: