
ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீதான ஈரானிய தாக்குதல், வெளியிடப்பட்டதை விட மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடந்த மாதம் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் முன்னர் வெளியிடப்பட்டதை விட அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தூதரகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இரண்டு ட்ரோன்கள் வெடித்ததில், மூன்று தளங்களும் சிஐஏ நிலையமும் சேதமடைந்ததாக முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 12 மணி நேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், சேதம் குறைவாகவே இருந்ததாக சவூதி அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தமை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments: