News Just In

3/05/2026 11:25:00 AM

நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு


நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் றியாஸ் ஆதத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான எம்.ஐ. இர்பான் அவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்படும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கட்சி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.ஐ. இர்பான் அவர்களுக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் 2026 மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அன்றைய தெரிவின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்மொழியப்படும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கௌரவ உறுப்பினரான றியாஸ் ஆதம் அவர்களை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்ய தங்களது ஆதரவை வழங்குமாறும் கட்சியின் பொதுச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

No comments: