மட்டக்களப்பு - கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜெகநாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்(,வைத்தியர் சிறிநாத் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் 24/3/2026 நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது அடையளப்படுத்தப்பட்ட குளங்கள் 428, பாவனையிலுள்ள குளங்கள் 202, கைவிடப்பட்ட குளங்கள் 26, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கையை கூட்டுவதற்காக கைவிடப்பட்ட குளங்களை புனரமைப்பதால் பல நூற்றுக்கான ஏக்கர் நிலங்களை பயிர்ச்செய்கைக்கு இணைத்துக்கொள்ளலாம் என பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.குளங்கள் புனரமைப்பது,விவசாய நிலங்களின் ஏக்கரை கூட்டுவது அதற்கான தீர்வுகளை காண்பதற்குரிய அமைச்சர்கள்,ஆளுநரிடம் முன்கொண்டு செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்
No comments: