News Just In

3/10/2026 11:59:00 AM

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு


நூருல் ஹுதா உமர்

2026 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி கடந்த 07ஆம் திகதி திருகோணமலை சென் மேரீஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரிவு III (தரம் 9, 10, 11) பிரிவில் கலந்து கொண்ட நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் மாணவன் எஸ். அப்லி ஹுமைத் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாணவனின் இந்த சாதனைக்கு அவரது பெற்றோர், பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர், கணிதப் பாட இணைப்பாளர் எம்.ஐ.நவாஸ், ஆசிரியர்களான எஸ்.எம்.சஜிதா பானு, கே.எல்.. ஃபைசா, ஏ.வாஹேசன், ஐ.எல்.இஸ்திகார் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொண்ட உதவி அதிபர் எம்.எம்.எம்.உவைஸ் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

No comments: